Monday 12 August 2013

முப்பதை கடந்தவுடன்...!!


விருப்பு வெருப்புடன்
வாழ பழகிவிட்டது...

மனைவியால்
சகித்துக்கொள்ள முடியவில்லை
சில மௌனங்களை....

புரியாது அவளுக்கு....

அவளும் சரியாவாள்
முப்பதை தாண்டும் பொழுது..

சில நேரங்களில் தோன்றும்
தோள் கொடுக்க
ஆள் இல்லையே
என்று.....???

நீ எத்தனை பேருக்கு
கொடுத்தாய்
உனக்கு கொடுக்க..??

ஏதோ சில சௌரியங்கள்
சில அசௌரியங்கள்
நண்பர்களாலும்
உறவினர்களாலும்
அதனால்
அவர்கள் அனைவரையும்
தவிர்க்க இயலாது...

எவனோ ஒருவனுக்கு
நீயும் அப்படியே...

சில நேரத்து
சோகங்கள்....
இதையும் கடப்போம்
என்று உள்ளிருந்து
ஒரு குரல்....

ஏதோ ஒரு
குருட்டு நம்பிக்கை
நாமும் ஜெயிப்போம்
என்று...

வாழ்க்கை
சில நேரம் தத்துவமாய்
சில நேரம் சுத்தமாய்
விளக்கம் புரியாத
பக்கங்களாய்....

ஏதோ ஒன்றைத்தேடி
ஏதோ ஒன்று
கிடைக்கும் பொழுது....

சந்தோஷமோ..
துக்கமோ அதை கூட
பகிர்ந்து கொள்ள
நேரமில்லை இன்று
மனிதனுக்கு....

வாழ்வுடன்
தொடர்புடைய
சில சந்தோஷங்களுக்கு
நாம் இடம் கொடுப்பதே
இல்லை....
அதையும் மீறிய
சில சந்தோஷங்கள்
சங்கடங்களுடனே
முடிகிறது.....

வாழ்க்கையின்
அர்த்தம் சில
நேரங்களில்
குறைய தொடங்குகிறது

நாம் வாழ்க்கையை
தேட தொடங்கும் பொழுது...







-க.சி.வேலன்-




Monday 20 June 2011

காதல்...

தோல்விகள்

அதிகம் இல்லாத

வாழ்க்கை


வெற்றியும்

அதிகம்

வேண்டாம்


இரண்டுக்கும்

இடம் கொடுக்க

வேண்டாம்


மேடுகள்

கால் தடுக்கும்


பள்ளங்கள்

கால் வழுக்கும்


சமதரை

சம்மதம்


எப்பொழுதும்

சிரிக்கின்ற

உதடுகள் வேண்டாம்


துன்பத்திலிருப்பவன்

காயப்படுவான்


எப்பொழுதும்

முறைக்கின்ற

கண்களும் வேண்டாம்


நேசிப்பவர்கள்

பலர் எதிரியாவர்


காதல் இல்லாத

வாழ்க்கை

வேண்டும்


அதற்கு

கடவுளைதான்

கேட்க வேண்டும்


கடவுள்

எங்கிருப்பார்..??

ம்..ம்..ம்..ம்..

காதலில்….!!!!


பிறகு

எப்படி..???

காதலித்து

பின் சொல்…


எதை…???


காதல்

வேண்டாம்

என்று கடவுளிடமா..?


இல்லை...


காதலை

காதலியிடமா..?